சுனில் நரைன் அபாயகரமான வீரர்: கவுதம் காம்பீர்

0
155

வெஸ்ட் இண் டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரைன் கடந்த நவம்பர் மாதம் அவரது பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஐ.பி.எல். போட்டியிலும் அவரது பந்துவீச்சில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் பரிசோதனையில் சுனில் நரீன் தனது பந்து வீச்சை திருத்தம் செய்தார். இதை ஏற்று கொண்ட ஐ.சி.சி. அவருக்கு அனுமதி அளித்தது.

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் இடம் பெற்று உள்ளார். இதுகுறித்து கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது:–

தற்போது அணிக்கு திரும்பியுள்ள சுனில் நரைன் மேலும் திறமையுடன் அபாயகரமான வீரராக இருக்கிறார். அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.

எங்கள் அணியில் உள்ள ரஸ்சல் 20 ஓவர் உலககோப்பை அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என்று வேண்டினேன். ஆனால் அது நடக்கவில்லை அவர் அற்புதமான வீரர். ரஸ்சல், சுனிலுடன் சாம்பியன் நடனம் ஆடுவோம் என்று நம்புகிறேன் என்றார்.

கொல்கத்தா வீரர் சகீப் உல் ஹசின் கூறுகையில், சுனில் நரைன் பந்துவீச்சை சரி செய்து இருப்பது கொல்கத்தா அணிக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம் ஆகும். கொல்கத்தா அணி வெற்றிக்கு அவர் எப்போதுமே முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறார்.

LEAVE A REPLY