(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் வாகனங்கள் விபத்து

0
472

காத்தான்குடி பிரதான வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (09) சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தின் காரணமாக எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குறித்த மூன்று வாகனங்களுமே சேதத்துக்குள்ளாகியுள்ளன.

காத்தான்குடி-01, பிரதான வீதி அந் நாஸர் வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் பாதசாரிகள் கடந்து செல்லும் போது முன்னால் சென்ற வாகனம் நிறுத்தி வழிவிட்ட வேளையில் பின்னால் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதனாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

Photos: Misfak Kabeer

Accident KKY 09.04.2016 b Accident KKY 09.04.2016 c Accident KKY 09.04.2016 d

Accident KKY 09.04.2016 a

LEAVE A REPLY