ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 111 பேர் பலி

0
165

இந்தியாவின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிலவும் கடும் வெயிலுக்கு, கடந்த சில நாள்களில் மட்டும், 111 பேர் பலியாகி உள்ளனர்.

தெலுங்கானாவில், 66 பேரும், ஆந்திராவில், 45 பேரும் பலியாகி உள்ளனர்.

‘எல் – நினோ’ எனப்படும் பருவநிலை மாறுபாடு காரணமாக, உலகெங்கும் தட்பவெப்ப நிலையில் மிகுந்த மாறுபாடு காணப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் குறைந்த பருவமழை காரணமாக, கடந்த ஆண்டில் கடும் வெயில் நிலவியது. இதனால் இந்த இரு மாநிலங்களில், 2,000 பேர் உயிரிழந்தனர். இதில், ஆந்திராவில் தான் அதிகமானோர் பலியாயினர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் மிகக் கடுமையாக உள்ளது. வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும், அடுத்த இரண்டு மாதங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும், வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

கோடை மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், கடந்த சில நாட்களில் மட்டும் வெயிலுக்கு, 111 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்ச வெப்பநிலை, 42 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக நிலவி வருகிறது. இது வழக்கமான வெப்பநிலையை விட, 5 டிகிரி கூடுதலாகும்.

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் தண்ணீர் பந்தல்கள் அமைப்பதில், இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. சுகாதாரத் துறை சார்பிலும் எச்சரிக்கை பிரசாரம் நடந்து வருகிறது.

#Dinamalar

LEAVE A REPLY