ஒரு நாள் சிசுவை குழிதோண்டி புதைத்த தம்பதியினர் கைது

0
283

பிர­ச­வித்த ஒரு நாள்  வய­து­டைய சிசுவை  தமது வீட்டுத் தோட்­டத்தில் குழி­தோண்டி புதைத்த தம்பதி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக கொச்­சிக்­கடை பொலிஸார் தெரி­வித்­தனர்.

எத்­கால, வெலி­ஹேன, கொச்­சிக்­கடைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த  33 வயதுடைய கணவனும், 32 வயதுடைய மனைவியுமே இவ்வாறு  கைது செய்­யப்­பட்டுள்ளனர்.

சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
கைது செய்­யப்­பட்ட தம்­ப­தி­யி­ன­ருக்கு ஐந்து பிள்­ளைகள்  உள்­ளனர். ஆறா­வது குழந்­தையை பெறு­வ­தற்­காக பெண்  கர்ப்­பி­ணி­யாக   இருந்­துள்ளார். இந்­நி­லையில் குழந்­தையை ஈன்று சந்­தேக நபர்­க­ளது வீட்டுத் தோட்­டத்தில்

சிசுவைப் புதைத்­துள்­ள­தாக அந்தப் பகுதி கிராம சேவ­க­ருக்கு ஒருவர் தகவல் வழங்­கி­யுள்ளார். இதனை அடுத்து கொச்­சிக்­கடை பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களை அடுத்து சந்­தேக நபர்­களின் வீட்­டுக்கு முன்­பாக உள்ள கஜு மரத்தின் கீழ் குழி தோண்­டப்­பட்டு பிறந்து ஒரு நாள் வய­து­டைய  அந்த சிசு புதைக்­கப்­பட்­டுள்­ள­மையும் , அந்த சிசுவை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வீட்டில் வைத்து சந்­தேக நப­ரான பெண் பிர­ச­வித்­துள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நபர்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்­ப­வ­ர­்கள் எனவும், கணவன் கூலி வேலை செய்து கிடைக்கப்பெறும் வரு­வாயின் பெரும் பகு­தியை மது­பா­னம் அருந்த செல­வி­டு­பவர் எனவும் பொலிஸ் விசா­ர­ணை­களின் போது தெரியவந்­துள்­ளது.

இந்­நி­லையில் நேற்று முற்­பகல் நீர்­கொ­ழும்பு பிர­தான மஜிஸ்ட்ரேட் ருச்­சிர வெலி­வத்த , நீர்­கொ­ழும்பு சட்ட வைத்­திய அதி­காரி விசேட வைத்­திய நிபுணர் ரூஹூல் ஹக் முன்­னி­லையில் சடலம் தோண்டி எடுக்­கப்­பட்­டது. பொலிஸார் சந்­தேக நபர்­க­ளான தம்­ப­தி­யி­னரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY