யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்களின் விபரம் ஷிப்லி பாறுக்கியனால் கையளிப்பு

0
100

(M.T. ஹைதர் அலி)

கடந்தகால யுத்தத்தின்போது இடம் பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றப்படாத நூற்றுக் கணக்கானோர் இன்னும் இடம் பெயர்ந்த நிலையிலேயே பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான ஓர் வீட்டுத்திட்டம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சினால் யுத்தத்தினால் வீடுகளை இழந்தவர்கள் 65,000 வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை பெறல் எனும் திட்டம் அண்மையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நேற்று (07) வியாழக்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களான செம்மண்ணோடை, கொண்டையன்கேணி, பிறைந்துறைச்சேனை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலிருந்து வெளியேறி மீள்குடியேற்றம் செய்யப்படாத பாதிக்கப்பட்ட மக்களின் ஒருதொகை விண்ணப்பங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா (SLAS), உதவி பிரதேச செயலாளர் அல்-அமீன் ஆகியோரிடம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வைத்து கையளித்தார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாஞ்சோலை, பதுரியா நகர், கேணிமடு மற்றும் மீராவோடை ஆகிய பிரதேசங்களிலிருந்து வெளியேறி மீள்குடியேற்றம் செய்யப்படாத பாதிக்கப்பட்ட மக்களின் ஒருதொகை விண்ணப்பங்ளும் அன்மையில் கையளிக்கட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தங்களது இடம் பெயர்வுக்கான குறிப்பிட்ட ஆவணங்களுடன் பிரதேச செயலாளரினூடாக விண்ணப்பிக்க முடியும் இவ்வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பபடிவத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் காத்தான்குடி காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY