மக்கள் பிரதிநிதிகள், தனவந்தர்கள் ஓரளவேனும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும்: ஷிப்லி பாறுக்

0
183
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை அவர்களின் இல்லம் சென்று அறிந்து கொள்ளும் வீதிக்கு ஒரு நாள் எனும் நடமாடும் சேவை வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 8ஆவது மக்களின் குறைகளை கண்டறியும் நடமாடும் சேவை பாலமுனை கிராமத்தில் நடுவோடை பழைய அஸறப் வித்தியாலய வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. 
 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில்  கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர், பிரதேச உயர் அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் மற்றும் இளைஞர் குழுவினர் பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு மிகவும்  சிறப்பாக நடைபெற்றது.

 
இந் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக், 
 
பாலமுனை கிராமமானது யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஓர் கிராமம் மட்டுமல்லாது இன்றும் கூட இக்கிராமமானது பாராபட்சம் காட்டப்பட்டு புறக்கனிக்கப்படக்கூடிய ஒரு நிலைமையினை காணக்கூடியதாயுள்ளது. இந்த நல்லாட்சியில் கூட இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதொன்றாகும். உண்மையில் இக்கிராமத்திலுள்ள மக்கள் தற்போது நடைபெறுகின்ற இந்த நல்லாட்சி மாற்றத்திற்காக வேண்டி பல்வேறு பங்களிப்பினை செய்துள்ளார்கள் என்பதனை மறுக்க முடியாது. இருந்த போதிலும் இக்கிராமமானது பல்வேறு அபிவிருத்தி தேவைப்பாடுகளுடன் இருப்பதை காணமுடிகின்றது. இக்கிராமத்தின் அபிவிருத்தி தேவைகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
 
மேலும் இக்கிராமத்திலுள்ள மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது தேவைகளை இனங்கண்டு ஓரளவேனும் தீர்க்க வேண்டும் என்ற நோக்கோடு இன்று இந்த நடமாடும் சேவையினை மேற்கொள்கின்றோம். உண்மையில் தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் உங்களின் இல்லம் நாடிவந்து வாக்குக் கேட்கின்றார்களோ அதே போன்று ஆட்சி அதிகாரங்களுக்கு வந்த பின்னரும்  தேர்தல் அல்லாத காலங்களில் மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். எனவே என்னால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வானது மக்களின் தேவைகளை ஓரளவேனும் தீர்ப்பதுடன் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் அவர்களது தேவைகளை முழுவதுமாக தீர்க்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் என்று இந்நிகழ்வில் உரையாற்றினார்.
 
மேலும்  இந்நடமாடும் சேவையின்போது பல்வேறு தேவைப்பாடுகள் மக்களால் முன்வைக்கப்பட்டது. அதில் உடனடியாக தீர்க்கக்கூடிய வகையில் ஒரு மீன் வியாபாரிக்கு அவருடைய வியாபாரத்தினை விருத்தி செய்யும் முகமாக மீன் பெட்டி ஒன்றினையும் இன்னுமொரு பம்பாய் மிட்டாய் விற்கும் வியாபாரிக்கு அவருடைய வியாபாரத்தினை விருத்தி செய்யும் முகமாக ஒரு தொகை நிதியினையும் தனது சொந்த நிதியிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக்  வழங்கி வைத்தார்.
 
உண்மையில் அரசாங்கத்தினால் மக்களின் தேவைகளை முற்றுமுழுதாக 100 வீதமும் நிவர்த்தி செய்ய முடியாது. இவ்வாறான சிறு சிறு செயற்பாடுகளை அரசியல் வாதிகள், தனவந்தர்கள் செய்யும் பட்சத்தில் மக்களின் தேவைகளை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் இறுதியாக அப்பிரதேச மக்களின் வாழ்வியல் தேவைகளை அறிந்து கொள்ளும் முகமாக அவர்களின் இல்லங்களை நாடிச் சென்று அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY