வியட்நாம் புதிய பிரதமர் நுயென் ஜுவான் புக்

0
109

வியட்நாமின் புதிய பிரதமராக நுயென் ஜுவான் புக் நேற்று பதவி யேற்றுக் கொண்டார். அதிகபட்ச கடன் சுமையில் தத்தளிக்கும் அரசு, நிதிப்பற்றாக்குறை, கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு என மிகச் சிக்கலான சூழ்நிலையில் வியட்நாம் பிரதமராக புக் பதவியேற் றுள்ளார்.

தற்போது 61 வயதாகும் நுயென் ஜுவான் புக், குவான் நாம் மாகாண ஆளுநராக இருந்து, 5 ஆண்டு களுக்கு முன் துணைப் பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது பிரதம ராக பொறுப்பேற்கிறார். பெயரள வுக்கு அதிகாரம் மிக்க வியட்நாம் நாடாளுமன்றத்தின் 490 உறுப்பினர் களில் 446 பேர் இதற்கான வாக் கெடுப்பில் புக்-குக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கம்யூனிஸ நாடான வியட்நாமில், அக்கட்சியின் உயர்நிலைக் குழு எடுப்பதுதான் முடிவு. கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், அதிபர், பிரதமர் ஆகியோர்தான் அதிகாரம் மிக்கவர்கள். நாடாளு மன்றத்துக்கு பெயரளவுக்கே அதிகாரம்.

கட்சி எடுத்த முடிவின்படியே நுயென் ஜுவான் புக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த நுயென் டான் டங் நேற்று முன்தினம் பதவி விலகினார்.

“நாட்டுக்கும், மக்களுக்கும், அரசியலமைப்புக்கும் நேர்மை யுடையவனாக செயல்படுவேன்” என தனது பதவிப் பிரமாணத்தின் போது புக் தெரிவித்தார்.

நாட்டின் அதிபரகா டிரான் டாய் குவாங் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நுயென் பு டிராங் மீண்டும் தேர் வாகியுள்ளார்.

வியட்நாமில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

LEAVE A REPLY