ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் அவசரமாக தரையிறக்கம்

0
170

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 891 என்ற விமானத்தில் இருந்து தொழில்நுட்ப கோளாறினால் புகை வெளியேறியமை காரணமாக அந்த விமானம் பாங்கொக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் பாங்கொக்கில் இருந்து கொழும்பை நோக்கி புறப்பட்ட விமானம் திடிரென்று மீண்டும் அந்த நாட்டிலேயே தரையிறக்க வேண்டி ஏற்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 263 பயணிகள் இருந்துள்ளதுடன், எனினும் பயணிகள் எவருக்கும் எந்தவித காயங்களும் இன்றி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சொர்ணபூமி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம் அந்த நாட்டு பொறியிலாளர்களால் சரிசெய்யப்பட்டு பின்னர் பயணிகள் அனைவரும் அதே விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் விமானியாக இருந்தவர் 25 வருட கால அனுபவம் கொண்ட ஒருவர் என்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY