உண்மையை ஒப்புக்கொண்டார் இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கெமருன்

0
125

வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் உலகப் பிரபலங்களின் பெயர்ப்பட்டியலை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டது.

இதில் இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கெமருனின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டை டேவிட் கெமருன் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது தந்தையின் சட்டவிரோத வெளிநாட்டுப் பண முதலீட்டின் மூலம் தங்களுக்கு பலன் கிடைத்தது உண்மைதான் எனவும் பஹாமாஸ் நாட்டின் ஒரு நிதி நிறுவனத்தில் தங்கள் குடும்பம் சுமார் 5 ஆயிரம் பங்குகளை வாங்கிவைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தான் பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன்னரே தாம் 30 ஆயிரம் பவுண்ட்கள் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY