சித்தாண்டியில் புனரமைக்கப்பட்ட கால்நடைத்தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

0
172

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டியில் புனரமைக்கப்பட்டுள்ள கால்நடைத் தீவன உற்பத்தித் தொழிற்சாலை நாளை (09) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளதாக அத்தொழிற்சாலையை நிருவகிக்கும் ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எஸ். உதயநாயகி தெரிவித்தார்.

மாதிரிப் பண்ணை மற்றும் இதனைத் திறந்து வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மண்டூரிலும் காலை 9.30 மணிக்கு புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணை ஒன்றும் திறந்து வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY