இலவச கணிம அளவையியல் டிப்ளோமா (NVQ Level – 5) தொழிற் பயிற்சி விண்ணப்பம் கோரல்

0
269

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

முஸ்லிம் எயிட் இலங்கை (Muslim Aid Sri Lanka) நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு நிலையமும் இணைந்து நடாத்தும் கணிம அளவையியல் (NVQ-5) தொழில் பயிற்சிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்பயிற்சி நெறியில் பங்குபற்ற விரும்புவோர், கல்விப் பொதுத் தராதர உயர்தர புஊநு (A/L) விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழிநுட்பப் பாடத் துறைகளில் குறைந்தது 2 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

பயிற்சிக்காலம் 1 வருடம்

இடம்:
தொழிற் பயிற்சி நிலையம்,
பல்கலைக் கழக கல்லூரிக் கட்டிடம்,
அட்வகேட் அப்துல் காதர் வீதி,
காத்தான்குடி– 03.

குறிப்பு: வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதால் விண்ணப்பதாரிகள் இறுதித் தினம் வரைக் காத்திருக்காது முன்னதாகவே விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 12.04.2016
தொடர்புகளுக்கு : 0772104222

LEAVE A REPLY