இன்றுமுதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது

0
311

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்துள்ளார்.

அதேவேளை இன்றுமுதல் புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேலை கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர குறிப்பிட்டார்.

-ET–

LEAVE A REPLY