பனாமா விவகாரம்: இலங்கையின் நிறுவனங்கள் தொடர்பில் தகவல் திரட்டுவதாக அரசாங்கம் தெரிவிப்பு

0
124

பனாமா இரகசிய ஆவணத்தில் கசிந்துள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் தகவல் திரட்டி வருவதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன இது தொடர்பில் விளக்கமளித்தார்.

வெளியாகியுள்ள தகவல்களின்படி குற்றம் சுமத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும்
உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து இலங்கை இதுவரையில் அதிகக் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில், இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்ததாவது,

பனாமா ஆவணத்தில் இலங்கையர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக 200 சம்பவங்கள் சிஷெல்ஸூடன் தொடர்புபட்டுள்ளன. சிஷெல்ஸூடன் கடந்த காலங்களில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது எமக்குத் தெரியும். அந்தத் தகவல் கிடைத்ததன் பின்னர் ஊழல் மோசடிகள் தொடர்பில்
விசாரணைகள் இடம்பெறும் என நான் நினைக்கின்றேன். நாம் தற்போது தகவல்களைத் திரட்டி வருகின்றோம்.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட தகவலைப் போன்று இதுவும் உலக நாடுகளில் பாரிய பிரச்சினையாகியுள்ளது. மில்லியன் கணக்கான ஆவணங்கள் வெளிவந்துள்ளன. அதில் அரச தலைவர்கள், அரசியல்வாதிகள், நிறுவன அதிகாரிகள் என பலரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
என்றார்.

-NF-

LEAVE A REPLY