உடல் எடையை குறைத்து கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

0
467

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது.

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும் .

இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் , சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல் நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது.

ஓட்ஸில் ‘பீட்டா-குளூ கான்’ எனும் ஒருவகை சிறப்பு நார்ச் சத்து அடங்கி உள்ளது. இந்த நார் சத்து நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது மேலும் நல்ல கொழுப்பின்_அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம் .

இருதயநோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழுதானிய உணவு இந்த ஓட்ஸ்

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம்.

கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

மிதமான இரத்த கொதிப்பை உள்ளவர்களுக்கு சுருக்கியக்க மற்றும் உச்சிவிரிவு இரத்த கொதிப்பை குறைக்க ஓட்ஸ் உதவுகிறது என 2002 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறியுள்ளது.

இரத்த கொதிப்பை குறிப்பாக கட்டுப்படுத்த, ஓட்ஸ் தவிடு மற்றும் முழு தானிய ஓட்ஸ் உதவுகிறது. கூடுதலாக, ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் இரத்த உறைக்கட்டி ஏற்படுவதை குறைக்கும்.

இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முழு ஓட்ஸ் மற்றும் இதர முழு தானியங்களை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

ஓட்ஸ் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளது. இது இயக்க உறுப்புகளை எதிர்த்து போராடும். அதே போல் மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் தமனித் தடிப்பை உண்டாக்கும் விஷத்தன்மை அழுத்தம் மற்றும் அழற்சியையும் இது குறைக்கும்.

மேலும் ஓட்ஸில் உள்ள லிக்னன்ஸ் இதய நோய்களைத் தடுக்கும். இதிலுள்ள பீட்டா-க்ளுக்கான் ஆரோக்கியமான இதயத்தை மேம்படுத்தும். அதேப்போல் குருதியூட்ட குறைக்கான அறுவை சிகிச்சையையும் இது மேம்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதி மாதவிடாய்க்கு பிறகு பெண்களுக்கு பயன்களை அளிக்கவும் இது அருமையான உணவாக விளங்குகிறது.

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.

LEAVE A REPLY