நிஜாமுதீனை வாளால் வெட்டி கொலை

0
190

28 வயதான நிஜாமுதீன் சமாத் ஜெகன்நாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்துள்ளார். மேலும் மதச்சார்பற்ற கருத்துகளை தனது பேஸ்புக் மூலம் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நிஜாமுதீன் கருத்துகளை சகித்துக்கொள்ள முடியாத சிலர், டாக்காவின் போக்குவரத்து சந்திப்பு பகுதியில் நிஜாமுதீனை வாளால் வெட்டி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

வங்காளதேசத்தில் மதத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கொலைசெய்யப்படும் நிலையானது நீடித்து வருகிறது.
இப்பிரச்சனையை சரியாக கையாளுவதில் வங்காளதேச அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று மதசார்பற்றவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவர் நிஜாமுதீன் சமாத், தொடர்ந்து மதவெறியர்களுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்களை பதிவுசெய்து வந்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மட்டும் மதசார்பின்மை கருத்துக்களை வெளியிட்ட சுமார் 4 பேர் பெரிய வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY