அன்ரோயிட் மாஸ்மலோ இயங்குதள பாவனையில் வீழ்ச்சி

0
188

இன்றைய காலகட்டத்தில் மொபைல் சாதனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமும் ஒன்றாகும்.

இவ் இயங்குதளத்தில் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அதன் புதிய பதிப்பான Android Marshmallow அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் பயனர்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பைப் பெற்றிராத இவ் இயங்குதளம் 4.6 சதவீதமான சாதனங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Android Lollipop பதிப்பானது 35.8 சதவீத சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு முன்னணியில் இருப்பதுடன், KitKat ஆனது 33.4 சதவீதங்களுடன் இரண்டாவது நிலையில் உள்ளது.

இவற்றுக்கு அடுத்தபடியாக Jelly Bean, Ice Cream Sandwich, Gingerbread, Froyo என்பன காணப்படுகின்றன.

LEAVE A REPLY