தெலுங்கானாவில் கோடை வெயிலுக்கு ஒரு வாரத்தில் 66 பேர் பலி

0
160

ஏப்ரல் மாதம் துவங்கியது முதல் தெலுங்கானாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெயிலுக்கு ஒரு வாரத்தில் மட்டும் 66 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து தெலுங்கானா அரசு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

”தெலுங்கானாவில் வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலுக்கு நலகொண்டாவில் 2, கம்மம் 5,மெஹபூப்நகர் 28, கரீம் நகர் 5, மேடக் 11, அடிலாபாத் 4, நிசாமாபாத் 7, வாரங்கால் 4 என இதுவரை கோடை வெயிலுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மெஹாபூப் நகரில் 28 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு டிப்ஸ் வழங்குவதற்காக புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்றை உருவாக்க தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY