கல்முனையில் குழாய்க்கிணற்றிலிருந்து நீல நிறத்தில் நீர்; அருந்த வேண்டாமென சுகாதாரப் பணிமனை அறிவுரை

0
170

கல்­முனை மத­ரசா வீதி­யில்­ அ­மைந்­துள்ள வீடொன்றில் வழ­மை­யான பாவ­னை­யி­லி­ருக்கும் குழாய்க் கிணற்­றி­லி­ருந்து பல தினங்­க­ளான இளம் நீல நிறத்தில் நீர் வரு­வ­தை­ய­றிந்த குறித்த வீட்டின் உரி­மை­யாளர் கல்­முனை தெற்கு சுகா­தா­ரப்­ ப­ணி­ம­னையில் நீரின் மாதி­ரியை ஒப்­ப­டைத்து தெரி­யப்­ப­டுத்­தியுள்ளர்.

நீரின் மாதி­ரியை பரி­சோ­திப்­ப­தற்­காக பகுப்­பாய்வு திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட்­டுள்­ள­தா­கவும் அது­வ­ரைக்கும் நீரை அருந்த வேண்டாம் எனவும் உரிய வீட்­டார்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கல்­முனை தெற்கு சுகா­தா­ரப்­ப­ணி­ம­னையின் பொறுப்­ப­தி­காரி டாக்டர் ஏ.எல்.எம்.றைஸ் தெரி­வித்தார்.

இதேவேளையில் குறித்த குழாய்க்­கி­ணறு அமைந்­துள்ள வீட்­டைச்­ சுற்றி பரி­சோ­தித்­த ­வே­ளையில் அந்­தப் ­ப­கு­தியில் எது­வித தொழிற்­சா­லை­களும் இல்லையெனவும் மேற்பார்வைக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

-MN-

LEAVE A REPLY