ரயிலுடன் ரிப்பர் மோதி விபத்து; ஒருவர் பலி

0
191

ரம்புக்கணையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணம் செய்த ரயிலுடன், ரிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (07) காலை இடம்பெற்ற இச்சம்பவம், களனி, வனவாசல பகுதியிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ரயில் கடவையில் பாதைத் தடுப்பு இல்லை என்பதோடு, சமிக்ஞை விளக்கின் மூலமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில், ரயிலின் மிதிபலகையில் பயணித்த 05 பயணிகளும், ரிப்பர் வாகன சாரதியும் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து பாரிய காயங்களுக்குள்ளான நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்தவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#Thinakaran

LEAVE A REPLY