ஹஜ் கட்டணம் குறையும்: முஸ்லிம் சமய விவகார அமைச்சர்

0
286

வர­லாற்றில் என்­று­மில்­லாத அள­வுக்கு இவ்­வ­ருடம் ஹஜ்­கட்­டணத்தை குறைப்பதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ்­ஜா­ஜிகள் திறந்த சந்­தையில் தமது முக­வர்­க­ளையும் கட்­ட­ணங்­க­ளையும் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­ள­ மு­டி­யு­மெ­னவும் முஸ்லிம் சம­ய­ வி­வ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

இதே­வேளை நாட்டின் இரு பிர­தான ஹஜ் முக­வர்கள் சங்­கங்கள் இவ்­வ­ருட ஹஜ் கட்­ட­ண­மாக 4 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா அற­வி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக அமைச்சர் ஹலீ­மிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளன.

ஸ்ரீலங்கா  ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலை­வரும் காரா டிரவல்ஸ் உரி­மை­யா­ள­ரு­மான எம்.எம்.நிஜார் மற்றும் செரண்டிப் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலை­வரும் என்.எம்.டிரவல்ஸ் உரி­மை­யா­ள­ரு­மான எம்.எஸ்.எச்.முஹம்மட் ஆகியோர் 4 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா கட்­ட­ணத்தில் சகல வச­தி­க­ளு­ட­னான ஹஜ் சேவையை வழங்கத் தயா­ராக இருப்­ப­தாக அமைச்­ச­ரிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில் இவ்­வ­ருடம் முதல் ஹஜ்­ஜாஜி­க­ளுக்கு குறைந்த கட்­ட­ணத்தில் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்க அமைச்சு திட்­டங்­களை வகுத்­துள்­ளது. ஹஜ் ஏற்­பா­டு­களில் பல புதிய முறைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

ஹஜ்­ஜா­ஜிகள் திறந்த சந்­தையில் தமது முக­வர்­களைத் தெரி­வு­செய்து கொள்­ளலாம். ஆகக் குறைந்த கட்­ட­ணத்தை வசூ­லிக்கும் முக­வர்­களைத் தெரிவு செய்து கொள்­வ­தற்கு வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ரு­டத்­துக்­கென நிய­மிக்­கப்­படும் ஹஜ் முக­வர்­களின் பெயர் விலா­ங்கள் தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள் அடங்­கிய பட்­டியல் ஒன்று ஹஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­படும் விண்­ணப்­பக்­கா­ரர்­க­ளுக்கு முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் அனுப்பி வைக்கும் ஹஜ்­ஜா­ஜிகள் தொடர்­பு­களை மேற்­கொண்டு ஆகக் குறைந்த கட்­ட­ணத்தில் சிறந்த சேவை வழங்கும் முக­வர்­களைத் தெரிவு செய்து கொள்­ளலாம் என்றார்.

ஹஜ்­குழு முக­வர்கள் கலந்­து­ரை­யாடல்
ஹஜ் குழு­வுக்கும் ஹஜ் முக­வர்­க­ளுக்­குமி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்­தினம் மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஹஜ்­குழுத் தலைவர் கலா­நிதி சியாட் உட்­பட 9 உறுப்­பி­னர்­களும் சுமார் 65 ஹஜ் முக­வர்­களும் கலந்து கொண்­டனர்.

இக்­கூட்­டத்தில் பல தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் முகவர் நிய­மன நேர்­முகப் பரீட்சை உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள வழி­முறை (Guide Lines) யின் படியே நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.

கோட்­டாக்கள் ஆகக் குறைந்­தது 25 ஆகவும் ஆகக்­கூ­டி­யது 150 ஆகவும் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஹஜ் ஏற்­பா­டுகள் அனைத்தும் பதி­வுகள் உட்­பட சவூதி அரே­பி­யாவின் புதிய ஹஜ் சட்­ட­திட்­டத்­தின்­படி ஒன்­லை­னிலே மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை ஸ்ரீலங்கா ஹஜ் முக­வர்கள் சங்­கத்­த­லை­வரும் காரா டிரவல்ஸ் உரி­மை­யா­ள­ரு­மான எம்.எம்.நிஜார் தனது நிறு­வ­னத்தின் ஆகக்குறைந்த ஹஜ் கட்டணம் 4 ½ இலட்சமாக இருக்கும் அதேவேளை ஹஜ்ஜாஜிகள் தமக்கு விசேட வசதிகள் வாய்ப்புகள் கோரினால் அந்தச் சேவைக்குரிய கட்டணங்கள் மேலதிகமாக  அறவிடப்படும் என ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.

இதேவேளை 4 ½ இலட்சம் ரூபாவுக்கு வழங்கப்படும் ஹஜ் சேவை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அமையும் எனவும் கூறினார்.

-Vidivelli-

LEAVE A REPLY