சாதனை படைத்த ஏறாவூர் மாணவர்களை NFGG கௌரவிப்பு!

0
307

(NFGG ஊடகப் பிரிவு)

O/L பரீட்சையில் அதிதிறமை சித்திகளை அடைந்த ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர்களுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கடந்த 04.04.2016 அன்று நடாத்தியது.

NFGG யின் ஏறாவூர் பிரதேச செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

ஏறாவூர் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான மீரா கேணி கிராமத்தில் அமைந்துள்ள மாக்கான் மாக்கார் வித்தியாலயமானது 50 வருடத்திற்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதாகும். இந்த நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்பாட சாலையில் முதன் முறையாக கடந்த 2015 – O/L பரீட்சையில் ஒரு மாணவி 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதே போல் மேலும் மூன்று மாணவர்கள் 8A 1B சித்திகளையும், மேலும் இரண்டு மாணவர்கள் 7A 2B சித்திகளையும் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வரலாற்று சாதனை படைத்த இந்த மாணவர்களையும், அதற்கு வழி காட்டிய அதிபர் மற்றும் ஆசரியர்களையும் பாராட்டி கௌரவிக்குமுகமாகவே இந்த விசேட கௌரவிப்பு நிகழ்வினை NFGGயின் ஏறாவூர் பிரதேச செயற்குழு ஏற்பாடு செய்திருந்தது.

NFGG யின் எறாவூர் பிரதேச செயற்குழு உறுப்பினரான MLM சுஹைல் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் MMமுஹைதீன் உட்பட உப அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பெற்றோர்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு NFGG யின் ஏறாவூர் பிரதேச செயற்குழு உறுப்பினர்களான AL அமீர் அவர்களும் NFGG யின் மட்டக்களப்பு பிராந்திய சபை சிரேஸ்ட உறுப்பினர்களான ALM சபீல் (நளீமி), ASM ஹில்மி, MHM மிஹ்ழார் மற்றும் AHA நசீர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மாணவர்களின் எதிர்கால கல்வி தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய விசேட உரையொன்றை ஆற்றினார். அத்தோடு சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது பின் வரும் மாணவர்கள் அவர்களின் சாதனைகளுக்காக விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

MFD யரூசா. (9A) MF ஷம்ஹரீரா (8A 1B) ARM நிப்ராஸ் (8A. 1B) MH அஸீஹ். (8A. 1B) KM மசூத்.(7A 2B) M. சப்ரினா (7A. 2B) MHF. நுஸ்ஹா. (5A. 1B. 3C) LF நுஸ்கியா. (5A. 1B. 3 C)

அதே போன்று இந்த மாணவர்களின் சாதனைகளுக்கு காரணமாகவிருந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்

கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்

MSM. சபூர் (ISLAM)
MSM. நுஅப் ( ISLAM)
KJA. நஸார் (TAMIL)
MS. இஸ்ஸதீன் (ENGLISH)
MS. மொஹிதீன் (SCIENCE)
APM. அஸ்ரப் (MATHS)
MI. முஹம்மட் (HISTORY)
HMM. மக்பூழ் (CIVICS)
YM, றகீப் (GEOGRAPHY)
MACM. தாஸீம் (TAMIL LIT)
AM. உபைதுல்லாஹ் (PHY-EDU)
MYM. நஸீர் (BUSS.ACCO)

2dee423b-f5da-4477-85f4-a62bd6a840ee 94fd5307-6c8d-493a-8cdc-286c583b1c78 338bfb8c-1a68-400e-9e15-5f1700c4b78b 1796c949-e83f-40bc-9b8e-b8c0119e9bcd AiyHQuOVrq_rCT8VwA-0QUs9ie7A-Rek-C3PlsNYR1j_ b0066124-a37c-493d-8756-8b4ff757a828 d3b75245-2bc9-41d6-90a3-7360a4f227dd

LEAVE A REPLY