பாகிஸ்தான் சாலை விபத்துகளில் 23 பேர் பலி

0
155

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான்வாலி மாவட்டத்தின் ஹர்லோனி முர் பகுதி வழியாக வேகமாக சென்ற ஒரு பஸ், எதிரேவந்த டிரைலர் லாரியின்மீது மோதிய விபத்தில் 18 பேர் பலியாகினர், 30 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேபோல், பாகிஸ்தானின் ஆக்கிரமப்பில் உள்ள நீலம் சமவெளி பகுதியில் உள்ள பலாக்கா பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த ஒருகார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீலம் ஆற்றுக்குள் பாய்ந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY