ஜப்பானில் 6 பேருடன் சென்ற போர் விமானம் மாயம்

0
205

தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் இருந்து ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான யு-125 என்ற சிறுரக போர் விமானம் இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. அதில் 6 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடைசியாக தொடர்பு கொண்ட இடம் மலைப்பகுதி என்பதால், மலையில் விமானம் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராணுவம் மற்றும் அவசர பாதுகாப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விமானம் மாயமானதை பாதுகாப்புத்துறை உறுதி செய்துள்ளது.

LEAVE A REPLY