மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கான உடன்படிக்கை சஊதி அரேபியாவில்

0
233

மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கான உடன்படிக்கை இன்று சஊதி அரேபியாவின் ஜித்தா நகரில் இடம் பெற்றது.

சஊதி அரேபியாபில் இருக்கின்ற மிகப் பெரிய அமைப்பான சர்வேதச இஸ்லாமிய நிவாரண அமைப்பிற்கும் மட்டக்களப்பு கெம்பஸ்ஸுக்கும் இடையில் இன்று (06) காலை சஊதி அரேபியாவின் ஜித்தா நகரில் அமைந்துள்ள IIRO தலைமையகத்தில் மருத்துவ பீடம் அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் மட்டகளப்பு கெம்பஸின் தலைவரும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், சர்வதேச நிவாரண இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி அப்துல்லாஹ் முகம்மது ஹப்ஹப் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் ஊடாக மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடத்தை அமைப்பதற்கான முழுப் பொறுப்பையும் சஊதி அரேபியாவனுடைய IIRO அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மட்டக்களப்பு கெம்பஸில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ பீடத்தை அமைப்பதற்கும் அது தொடர்பான சகல கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் IIRO அமைப்பே பொறுப்பேற்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அதன் பிரகாரம் மிக விரைவில் இந்த கட்டிட வேலைகள் ஆரம்பிப்பதோடு இது தொடர்பான வேலைகளை செய்வதற்காக டாக்டர் அல் ஹத்தாத் என்ற வைத்திய நிபுனரை IIRO அமைப்பு நியமித்துள்ளது.

இந்த மருத்துவ பீடத்திலே ஆசிய பல்கலைக்கழகங்களில் இதுவரை அறிமுகப்படுத்தப்படாத நவீன கல்வி முறைக்கு ஏற்ப, அமெரிக்க பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள புதிய மருத்துவ பீடம் தொடர்பான கற்கை நெறிகள் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆசிய நாடுகளில் பல வருடங்களாக இருக்கின்ற மருத்துவ பீடத்தில் கற்பிக்கும் முறையினை தவிர்த்து, இன்று உலகம் நோக்குகின்ற சவால்களை மையமாக கொண்டு புதிய நோய்களை மையமாக கொண்டு இவற்றை தீர்ப்பதற்கான புதிய வழிமுறைகளை அமெரிக்க பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

ஐந்து வருடங்களை கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் உருவாக்கிய மருத்துவ பாடத்திட்டமே மட்டக்களப்பு கெம்பஸ்யில் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முதலாவது பல்கலைகழகமாக இந்த மட்டக்களப்பு கெம்பஸ் கருதப்படும் என்று IIRO அமைப்பின் பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 600 மில்லியன் ரூபாய்கள் செலவில் இந்த மருத்துவ பீடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான சகல வேலைகளையும் டாக்டர் அல் ஹத்தாத் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இன்னும் சில வாராங்களில் இதற்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கபடவுள்ளது.

இந் நிகழ்வில் ஹிரா பெளண்டேசன் செயலாளர் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி, IIRO அமைப்பின் நிதி பொது முகாமையாளர் கலாநிதி தாரிக் உமர் காபிBலி இலங்கைக்கான சஊதி பதில் consul general அஷ்செய்க் அன்சார் மற்றும் IIRO அமைப்பின் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், சஊதி ஊடகவியளார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

”இந்த உடன்படிக்கையானது மட்டக்களப்பு கெம்பஸ்ஸை பொறுத்தவரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். மட்டக்களப்பு கெம்பஸ்ஸின் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு இவ்வாறான சர்வதேச பிரசித்தி வாய்ந்த அமைப்போடு உடன்படிக்கை செய்தது மூலமாக மட்டக்களப்பு கெம்பஸின் மருத்துவ பீடம் மிக முன்னேற்றத்தை அடைய இருக்கிறது“ என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

AiyHQuOVrq_rCT8VwA-0QUs9ie7A-Rek-C3PlsNYR1j_ AjqCe_60cSljU8Og8Fr_z4S0rq2HzJpbOZbnZ5DdIZ4x AkpA6D4_I8J5B-1mvpeMWpFFFqHmNVtWcdbMh7AACH_O AqOl3N_-iwZP4inLq-PEaWLpNdN45OvAyvVHEphwF4ql AuvRET7C9hkNHA48mF3lAxF08FizIFn3dxFPiqgBB0a1 Av17P23RXsSZoILCCUyTuHYHfP25Wbn_GQ1azzIbbAjW

LEAVE A REPLY