360 கிலோ எடையுள்ள முதலை வேட்டையாடப்பட்டது

0
488

giant_alligator_capture_in_floridaஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கால்நடைகளை அடித்து தின்று வாழ்ந்த 15 அடி நீளமும் 360 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று வேட்டையாடப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளில் தான் வேட்டையாடிய முதலைகளில் இதுவே மிகப் பெரியது என அதனைக் கொன்ற லீ லைட்ஸே தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமையன்று இருபது அடி தூரத்தில் இந்த முதலை தென்பட்டபோது அவரும் அவரது வழிகாட்டி ப்ளேக் காட்வினும் அதனைச் சுட்டுக் கொன்றனர்.

ஃப்ளோரிடாவில் வேட்டைக்கென ஒரு பண்ணையை நிர்வகித்துவரும் லீ லைட்ஸே, முதலை, காட்டுப் பன்றி போன்றவற்றை தொழில்முறையில் வேட்டையாட ஏற்பாடு செய்துவருகிறார்.

இதற்கு முன்பாக அவரது பண்ணையில் 13 அடி நீளமுள்ள முதலை கொல்லப்பட்டிருக்கிறது.

அலிகேட்டர் எனப்படும் முதலைவகைகள் அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களான ஃப்ளோரிடாவிலும் லூஸியானாவிலும் பெருமளவில் காணப்படுகின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும் பத்து லட்சத்திற்கு அதிகமான முதலைகள் காணப்படுகின்றன.

தற்போது கொல்லப்பட்டிருக்கும் முதலையை பதப்படுத்தி வைக்கப்போவதாக லைட்ஸே தெரிவித்திருக்கிறார்.

#BBC

giant_alligator_capture_in_florida

LEAVE A REPLY