வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா பணிப்பாளர் சபைக் கூட்டம்

0
158

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பில் அமைந்துள்ள வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா பணிப்பாளர் சபைக் கூட்டம் வியாழக்கிழமை 07.04.2016 பிற்பகல் 3 மணிக்கு மன்ரேசா வீதி கொத்துக்குளத்தில் அமைந்துள்ள மேற்படி பூங்கா அலுவலகத்தில் இடம்பெறுமென பணிப்பாளர் சபைச் செயலாளர் செல்வி ராஜேஸ்வரி கந்தையா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்குப் பின்னர் பணிப்பாளர் சபைக் கூட்டம் இடம்பெறுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக சிறார்களின் மன வடுக்களைக் குணப்படுத்துவதற்காக சிறுவர் சமாதானப் பூங்கா 1995 ஆம் ஆண்டு கனேடிய தொண்டரான போல் ஹோகன், மட்டக்களப்பைச் சேர்ந்த அடிகளார் போல் சற்குணநாயகம் மற்றும் சமூக நல ஆர்வலர் ஏ.எச்.ஏ. ஹ{ஸைன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றுவரை இந்தப் பூங்கா செயற்பாடுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக சிறார்கள் பங்குபற்றியிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

d407000a-c71c-43cd-89c0-e48aa13e2e66

LEAVE A REPLY