பாடசாலைக்கு சென்ற மாணவி இரண்டு மாதங்களின் பின் கணவனுடன் திரும்பினார்

0
361

காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர்.

இச்சம்பவம் ஊவா – பரணகமையில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26ம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

இம் முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்த வேளையில், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போனதாக குறிப்பிடப்படும் மாணவி, தனது கணவனுடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவ் இருவரும் இள வயதுகளை உடையவர்களென்பதும், அவர்கள் விசாரனையின் பின்னர் வெலிமடை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவிக்கு 15 வயது அவரது கணவனுக்கு 17 வயது என்றும் தெரிய வந்துள்ளது.

#Adaderana

LEAVE A REPLY