பாராட்டும் கௌரவிப்பும்

0
109

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 இல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற (9 ஏ) மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 07.04.2016 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவிருப்பதாக மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர் பொ. மனோகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கல்வி வலயப் பிரிவுகளிலும் உள்ள பாடசாலைகளிலிருந்து தமிழ் மாணவர்கள் 72 பேரும் முஸ்லிம் மாணவர்கள் 55 பேரும் பாராட்டி கௌரவிக்கப்படுகின்றார்கள். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

LEAVE A REPLY