இரு வாரங்களாக யுவதியைக் காணவில்லை

0
180

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முதலாம் பிரிவு பொன்னையார் வீதியைச் சேர்ந்த யோகராசா ஜினிந்தா என்ற 19 வயதுடைய யுவதி கடந்த 20.03.2016 ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாய் யோகராசா நேசராணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

IMG_0763நானும் எனது கணவரும், எனது மகளுமாக மூவரும்தான் எமது வீட்டிலிருந்து வசித்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 20.03.2016 அன்று காலை 9 மணியளவில் எனது மகள் களுவாஞ்சிகுடி சந்தைக்குச் சென்றார்.

இதுவரையில் அவர் வீடுதிரும்பவில்லை. அன்றிலிருந்து இன்று வரைக்கும் பல இடங்களுக்கும் சென்று தேடி வருகின்றோம் இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனது மகள் காணாமல் போன விடையம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம், எனது மகளை யாராவது கண்டால் 0750 2727 98 என்ற எனது கைத்தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என காணாமல் போனதாகக் கூறப்படும் யோகராசா ஜினிந்தாவின் தாய் நேசராணி தெரிவிக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

Lady

LEAVE A REPLY