சோபித தேரரின் பிரேத பரிசோதனை இடம்பெறாமை அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

0
189

மறைந்த மாது­லு­வாவே சோபித தேரரின் தேகம் தொடர்பில் பிரேதப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளாமை உள்­ளிட்ட சில விட­யங்கள் குறித்து வைத்­திய நிபு­ணர்­களின் குழு ஊடாக விசா­ர­ணை­களை நடத்தி விரைவில் அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறு, கொழும்பு பிர­தம நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் அனில் ஜாசிங்­க­விற்கே இவ்­வாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. உடுவே தம்­மா­லோக தேர­ரினால் கடந்த மார்ச் 26 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முறைப்­பா­டொன்று முன்­வைக்­கப்­பட்­டது.

சோபித தேர­ருக்கு வழங்­கிய சிகிச்சை குறித்த வைத்­திய அறிக்கை காணாமல் போனமை மற்றும் சடலம் தொடர்பில் பிரேதப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளாமை போன்ற விட­யங்­களை முன்­வைத்து, அவ­ரது மரணம் சந்­தே­கத்­திற்­கு­ரி­யது என தம்­மா­லோக தேரர் குற்றப் புல­னாய்வு பிரிவில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அவர்கள் கொழும்பு பிர­தம நீதவான் நீதி­மன்­றத்தில் குறித்த தக­வல்­களை வழங்­கி­யி­ருந்­தனர். இதன்­படி விட­யங்­களை ஆராய்ந்த நீதவான் சோபித்த தேர­ருக்கு வழங்­கிய சிகிச்சை பற்றி குறித்த வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ரிடம் தக­வலை பெற்று அதனை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் இறப்புச் சான்­றி­தழில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் குறித்து பிரேதப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளாமை தொடர்பில் விரைவில் அறிக்­கையை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு பிர­தம நீதவான் குறிப்­பிட்­டுள்ளார். இந்த விசா­ர­ணை­களை கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட நிபுணர் குழுவினரால் மேற்கொள்ளுமாறும் அவர் பணித்துள்ளார்.

-VK-

LEAVE A REPLY