ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கான செயலமர்வு

0
176

(வாழைச்சேனை நிருபர்)

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விழுது – ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் நிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கான செயலமர்வொன்று எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விழுது – ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் காரியாலயத்தில் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை இந்தச் செயலமர்வு நடைபெறவுள்ளது.

நிலை மாறு கால நீதி தொடர்பான தெளிவூட்டல்கள் சமூக மட்டத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இன்றைய கால கட்டத்தில் முக்கிய மான தேவையாக உள்ளது.

இச் செயலமர்வின் பயிற்சியாளராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா கலந்து கொள்ளவுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரை நிலைமாறுகால நீதியினை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இதற்கான சகல விதமான ஆதரவுகளையும் ஊடகவியலாளர்கள் வழங்கியாக வேண்டும்.

நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டில் நம்பிக்கையினை மீள கட்டியெழுப்பல், உண்மையினை வெளிப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல், நிலையான சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல் என்பவை முக்கிய பகுதிகளாக இருக்கின்றன.

அத்துடன், நிலைமாறு கால நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை, நிறுவன ரீதியிலான சீர் திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியினைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பனவற்றுக்கான தேவையும் உள்ளது.

அந்தவகையில், பிராந்தியங்களிலுள்ள ஊடகவியாலாளர்களும் பங்களிப்பு வழங்க வேண்டிய தேவை அதிகம் உள்ளது என்ற வகையில் நிலைமாறுகால நீதி தொடர்பில் நடத்தப்படுகின்ற இந்தச் செயலமர்வில் கலந்து கொள்ளுமாறு தங்களை அழைக்கிறேன்.

இந்தச் செயலமர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0772772601 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ குறுஞ்செய்தியினை அனுப்பியோ தங்களது வருகையினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பிராந்திய ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வில் நமது ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தே.அதிரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY