மற்றுமொரு பின்தங்கிய பாலர்பாடசாலைக்கான இலவச சீருடைகளை NFGG வழங்கியது.

0
150

காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் பின்தங்கிய முன்பள்ளிகளில் ஒன்றான அல்-இக்பால் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச சீருடைகள் நல்லாட்சிக்கான தேசியமுன்னணியினால் (NFGG) வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த 03.04.2016 அன்று அல்-இக்பால் வித்தியாலயத்தின் அதிபர் VTM ஹனீபா அவர்களின் தலைமையில் பாடசாலையின் கேட்போர் மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போதே இந்த இலவச சீருடை விநியோகம் இடம் பெற்றது. NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இலவச சீருடைகளை வழங்கி வைத்தார்.

இப்பாலர் பாடசாலையின் நிலைமைகளை நேரில் கண்டறியும் விஜயம் ஒன்றினை அப்துர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர் கடந்த 14.03.2016  அன்று மேற்கொண்டிருந்தனர். பாடசாலை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட மாணவர்களுக்கான சீருடைகள் இல்லை என்ற விடயமானது உடனடித் தேவையாக NFGGயிடம் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. இதனை உடனடியாகத் தீர்த்து வைப்பதாக வழங்கப்பட்ட உறுதிக்கு அமைவாகவே இந்த மாணவர்களுக்கான இலவச சீருடைகள் தற்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய பாடசாலை அதிபர் , NFGG உடனடியாக வழங்கிய இந்தத் தீர்வுக்காக உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு தேவைப்படும் இன்னும் சில தேவைகளையும் NFGG யிடம் முன்வைத்தார்.

இதன் போது உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,  தமது சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் கல்விப் பணிகளுக்கே முதலிடம் கொடுப்பதாகவும் ஏனைய அரசியல் வாதிகளைப் போல் அரசாங்க நிதிகள் எதுவும் தமக்குக் கிடைப்பதில்லையெனினும் கூட தமது சொந்த நிதியிலிருந்தே இந்த சமூக அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செய்வதாகவும், அந்த வகையில் பாடசாலையின் ஐந்தாம் தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான மேலும் சில உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.

இநநிகழ்வில் , மஸ்ஜிதுஷ்-ஷலாஹ்  பள்ளிவாயலின் தலைவர் I ஜனாப்தீன் அவர்களும் NFGGயின் காத்தான்குடி பிரதேச சிரேஸ்ட உறுப்பினர்களான PMM நவாஸ், ASM ஹில்மி ,ULM இன்சுதீன், AMA நாஸர் , AHM றிபாய்தீன், UL றபீக், KMM புஹாரி, MYM சரீப் , MHA நசீர் மற்றும் AGM பழீல் ஆகியோரும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY