பனாமா இரகசிய வங்கிக் கணக்குகளைப் பேணும் நாடுகளில் இலங்கையும் அடங்குவதாகத் தகவல்

0
179

உலகில் இரசிய வங்கிக்கணக்குகள் உள்ள நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பனாமா இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்பான ICIJ நிறுவனம், உலகின் பிரபல அரச தலைவர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தமது சொத்துக்களை மறைத்து வைப்பதற்காகப் பயன்படுத்திய இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆட்சியில் இருந்த மற்றும் தற்போது ஆட்சியில் உள்ள 128 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் தகவல்கள் அடங்கிய 11.5 மில்லியன் ஆவணங்கள் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த செய்தி காரணமாக உலகளாவிய ரீதியில் செல்வந்தர்களும் அதிகாரம் பொருந்தியவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பனாமா இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பிலான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்களைக் குறிக்கும் வரைபடமொன்றைத் தயாரித்துள்ளது.

இந்த வரைபடத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று வாடிக்கையாளர்களும் 22 பங்குதாரர்களும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான தகவல்கள் குறித்து புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச ஒன்றியத்திடம் வினவியபோதிலும் அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

அண்மைக்காலமாக இலங்கையின் அரசியல்வாதிகள் பலருக்கு எதிராக இத்தகைய நிதி மோசடிகள் குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான துரித விசாரணை நடத்தப்படுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், பனாமா வங்கிக் கணக்குகள் தொடர்பிலான தகவல்கள் வெளியானதும் இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

-NF-

LEAVE A REPLY