தேர்தல் காலங்களில் வீடுவீடாக சென்று வாக்குகள் கேட்பதுபோல் நடமாடும் சேவையினூடாக மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து சேவையாற்ற வேண்டும்: ஷிப்லி பாறுக்

0
196

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடிச் சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்டம் தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறன மக்கள் குறைகளை கேட்கும் ஆறாவது நடமாடும் சேவை நிகழ்வு மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லை கிராமமான மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் ஹிளுறிய ஜும்மா பள்ளிவாயல் முன்பாக அன்மையில் காலை 09.30 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நல்ல செயற்திட்ட நிகழ்வில் மஞ்சந்தொடுவாய் கிராம சேவகர் திரு. தினேஷ், பள்ளிவாயல் நிர்வாகத்தினர், அப்பிரதேசத்தின் நலன் விரும்பிகள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய இவ்வாறான செயற்பாட்டினால் அநேகமான விடையங்களை தீர்க்க முடியுமென்று பாராட்டி தங்களுடைய பூரண ஒத்துழைப்புக்களையும் தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

இந்த நல்லதோர் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்…

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தேர்தல் காலங்களில் வீடுவீடாக சென்று வாக்குகள் கேட்பதுபோல், தேர்தல் ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்பும் அம்மக்களிடம் சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை அனைத்து அரசியல்வாதிகளிடம் வரவேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறான திட்டத்தினூடாக மக்களது தேவைகளை எங்களால் முடியுமான வரையில் என்ன என்ன விடயங்களை தீர்க்க முடியுமோ அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார். மேலும் அவர் கூறுகையில் இவ்வறான திட்டத்தினூடாக மக்களின் சுமைகளை ஓரளவேனும் குறைக்க முடியும் என நம்புகின்றேன், இவ்வாறு அனைத்து அரசியல்வாதிகளும் செயற்படுவார்களையானால் இன்ஷாஅல்லாஹ் மக்கள் மிகவும் நல்ல நிலைக்கு வருவார்கள் அதனால் எமது பிரதேசம், நாடு என்பன முன்னேற்றமடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எனவே இன்று இவாறான ஓர் நிகழ்வினை மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் நடத்துகின்றோம் அதனூடாக தீக்க கூடிய விடயங்களை தீர்த்து மற்ற விடயங்களை எதிர்காலத்தில் அதற்குரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறினார். நடமாடும் சேவை நிகழ்வு நிறைவடைந்த பிற்பாடு அப்பிரதேச மக்களின் வீடுகளுக்கு சென்று அம்மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களது நிலைமையினையும் நேரில் கண்டறிந்தார்.

LEAVE A REPLY