பாகிஸ்தானில் கனமழை-நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

0
133

பாகிஸ்தானில் கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித்-பல்திஸ்தான் பிராந்தியங்களல் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பிராந்தியம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.

இந்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இரண்டு நாட்களில் மட்டும் 71 பேர் பலியாகி உள்ளதாகவும், 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் 370 வீடுகள் அழிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்துபோன 71 பேரில் 48 பேர் கைபர்-பாக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கில்கிட்-பல்திஸ்தானில் 15 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 8 பேரும் இறந்துள்ளனர்.

LEAVE A REPLY