இந்தோனேசியாவில் விமானங்கள் மோதல்

0
139

இந்தோனேசியா தலைநகர் ஜகத்தாவில் ஹாலிம் பெர்டானாகுசுமா உள்நாட்டு விமான நிலையம் உள்ளது. அங்கு ‘லயன்ஏர்’ குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 56 பேர் இருந்தனர். அவர்களில் 49 பேர் பயணிகள். 7 பேர் விமான சிப்பந்திகள். இந்த விமானம் விண்ணில் பறக்க ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டது.

அப்போது அந்த விமானம் தடம்மாறி பாய்ந்து ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே விமானி சாமர்த்தியமாக விமான இயக்கத்தை நிறுத்தினார். இந்த விபத்தில் மோதிய விமானத்தின் இடதுபுற இறக்கையும், மோதப்பட்ட விமானத்தின் வால் பகுதியும் சேதம் அடைந்தன.

இந்த நிலையில் மோதிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளும், சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. விமானியின் சாமர்த்தியத்தால் நடைபெற இருந்த பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து விசாரணக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY