உலக கிண்ண தோல்வியை நான் பொறுப்பேற்கிறேன்: அரவிந்த

0
256

இலங்கை கிரிக்கெட் அணியின் ரி20 உலகக் கிண்ண தோல்வி தான் பொறுப்பேற்பதாக அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி தெரிவுக்குழுவின் சிரேஷ்ட தலைவரான அரவிந்த டி சில்வா, இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இக்கருத்தை தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த தொடரில் சோபிக்க தவறிய திரிமான்ன தொடர்பிலும் தான் பொறுப்பேற்பதாக அவர் இதன்போது தெரிவித்ததோடு, லஹிரு திரிமான்ன, சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வீரர் என்பதோடு, அவருக்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தான் முற்றுமுழுதாக உடல் நலம் தேறாத நிலையிலும் தன்னை விளையாடுமாறு வற்புறுத்தியதாக லசித் மாலிங்க கருத்தொன்றை வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் விடுத்த கேள்வி தொடர்பில் பதிலளித்த அரவிந்த டி சில்வா, தான் விளையாடுவதற்கான உடல் தகுதியை கொண்டிருப்பதாக, ‘லசித் மாலிங்க தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாலிங்க எப்போது உடல் நலம் பெறுவார், எந்த தொடரில் விளையாடுவார் என்பதையும் பார்ப்போம் என அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மாத்திரமே தான், தற்போது வகிக்கும் சிரேஷ்ட தேர்வாளர் பதவியில் நீடிப்பேன் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

#Thinakaran

LEAVE A REPLY