ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நஸ்டஈடு

0
36

ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த 33 பேருக்கு நஸ்டஈடாக 4.68 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.

இதன்படி குறித்த சம்பவத்தால் பூரண அங்கவீனமுற்ற, பகுதியளவில் அங்கவீனமுற்ற மற்றும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பஹா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 பேருக்கும் மஹர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 பேருக்கும் நஸ்டஈடு வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 08ம் திகதி ஜனாதிபதி இதனை வழங்கி வைக்கவுள்ளார்.

ரத்துபஸ்வல சம்பவத்தினால் காயமடைந்த பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் பொருட்டு கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், அது தொடர்பாக கண்டறிந்து தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக கம்பஹா மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நஸ்டஈடு வழங்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#Adaderana

LEAVE A REPLY