கடைசி ஓவர் பற்றி கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்

0
634

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றத்தில் முடிந்த கடைசி ஓவர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டது.

கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்ததால் இங்கிலாந்தே வெற்றி பெறும் என்ற சூழல் நிலவியது.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த கடைசி ஓவரை வெளுத்து வாங்கிய பிராத்வெய்ட் 4 சிக்சர்கள் தொடர்ச்சியாக விளாசி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

தனது மோசமான பந்து வீச்சால் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் உலகக்கிண்ண வாய்ப்பை பறிகொடுத்தார்.

இந்த கடைசி ஓவர் குறித்து ஸ்டோக்ஸ் டுவிட்டரில் கூறுகையில், ”கடைசி ஓவர் எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

வருத்தத்தை அளித்து வருகிறது. இருப்பினும் எனக்கு அனைவரும் அதிக ஆதரவு அளித்து வருகின்றனர்.

எனது நாட்டுக்காக உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY