கிரீஸ் நாட்டிலிருந்து 202 அகதிகள் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டனர்

0
97

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகிவருகிறது.

இந்த பேராபத்தையும்மீறி மேற்கண்ட நாடுகளில் இருந்து அகதிகளாகவந்த லட்சக்கணக்கான மக்கள் கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக குடியேறியுள்ளனர். இத்தகையை அகதிகளின் பெருக்கத்தால் ஐரோப்பிய நாடுகளின் அமைதி, சட்டம்-ஒழுங்கு, பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. இந்த பின்னடைவை சீர்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சமீபத்தில்கூடி ஆலோசனை நடத்தினர்.

அதன்விளைவாக, சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய குற்றச்சாட்டின்கீழ் பிடிபட்டு தற்காலிக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை நாடுகடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவின்படி, தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற கிரீஸ் அரசு முடிவுசெய்தது.

இதில் முதல்கட்டமாக, நேற்று 202 பேர் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கிரீஸ் பாதுகாப்பு படையினருக்கும், அகதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த எதிர்ப்பையும்மீறி தற்காலிக சிறையில் இருந்து பஸ் மூலம் ஏற்றிச் செல்லப்பட்ட அகதிகள், சியோஸ் தீவு வழியாக துருக்கி நாட்டிலுள்ள டிகிலி துறைமுகத்துக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் 130 பேர் பாகிஸ்தானையும், 42 பேர் ஆப்கானிஸ்தானையும், 10 பேர் ஈரானையும், 5 பேர் காங்கோவையும், நான்கு பேர் இலங்கையும், 3 பேர் வங்காள் தேசத்தையும், 3 பேர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் சிரியா, சோமாலியா மற்றும் ஐவரி கோஸ்ட் நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கிரீஸ் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச பொது மன்னிப்பு சபையும் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன.

இப்படி அனுப்பப்படுபவர்களின் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில், மீண்டும் பயங்கர ஆபத்தை எதிர்நோக்கி, அதிகமான பணத்தை செலவழித்து, அவர்கள் வேறொரு ஐரோப்பிய நாட்டில் குடியேறுவதைதான் இதைப்போன்ற செயல்கள் ஊக்குவிக்கும் என மேற்கண்ட அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY