“1200 இந்தியர்கள் இலங்கையில் சிறுநீரக தானம்”

0
142

கடந்த நான்கைந்து ஆண்டுகளில் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக தானம் செய்திருப்பதாக நீதிமன்றம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் தரப்பு வழக்கறிஞர் லஷான் டயஸ் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களில் 6 பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டுள்ளதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கடந்த வாரம் நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆறு பேரும் இலங்கையில் தமது சிறுநீரகங்களை அன்பளிப்பு செய்ததாக கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நவலோகா மற்றும் லங்கா ஹாஸ்பிட்டல் ஆகிய தனியார் மருத்துவமனைகளில் சந்தேக நபர்கள் தமது சிறுநீரகங்களை வழங்கியதாக தெரிவித்த சட்டத்தரணி, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவிற்கு அமைவாகவே அவர்கள் இதனை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

கடந்த 2014இல் இவர்கள் சிறுநீரகங்களை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்கள் என்றும் அண்மைய சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்புகள் இல்லை என்றும் சட்டத்தரணி லக்ஷான் டயஸ் மேலும் கூறியிருக்கிறார்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

-BBC-

LEAVE A REPLY