மீட்கப்பட்ட வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்யுமாறு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் உத்தரவு

0
117

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திலுள்ள கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்ட வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்யுமாறு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பிரதேசத்தில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்கள் தற்போது காணிகளையும் கிணறுகளையும் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் கிணறொன்றிலிருந்து 60 எம். எம் ரக மோட்டர் குண்டுகள் 40 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடி குண்டுகள் தொடர்பாக மூதூர் பொலிஸாரால் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முன் வைக்கப்பட்ட அறிக்கையின் பேரிலே நீதிமன்றம் சாத்தாபுர விஷேட அதிரடிப்படை முகாம் வெடிப் பொருள் செயலிழப்பு பிரிவு மூலம் செயலிழக்கச் செய்யுமாறு திங்கட்கிழமை 04.04.2016 பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக இன்னும் சில கிணறுகளிலும் இது போன்ற வெடிப் பொருட்கள் இருக்கலாம் என்ற அச்சம் அந்த பிரதேச மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக கிணறுகளில் இறங்கி துப்பரவுப் பணிகளைச் செய்வதில் அவர்களிடையே ஒரு வித தயக்கமும் பீதியும் காணப்படுகின்றது.

LEAVE A REPLY