தங்க அறைக் கூலி
தங்க விலை சொல்வார்
சிங்கிள் ரூமுக்குள்
தங்குவார் பத்துப் பேர்
பொழுது புலர் காலை
போருக்குச் செல்வது போல்
பழுதான பாத்றூமில்
படையணி காக்கும்
சுபஹுக்கு ஒளுச் செய்ய
சுடு தண்ணி இல்லாட்டி
தண்ணீரைத் தொட்டு
தடவி ஒளு எடுப்பார்
செல்லும் இடமெல்லாம்
ஷெல்பி மழை கொட்டும்
மல்லாக்கப் படுத்து
மப் அடிப்பார் சில பேர்கள்
மாட்டு நாற்றத்தில்
மாட்டி நிற்கையிலே
வீட்டில் குடித்த பாலும்
வெளியே வரப் பார்க்கும்
கடையில் தின்றால்
காசு போகுமென்று
இடையில நிற்பாட்டி
இருப்பதை சமைப்பார்
தொழுகை தூரமாகும்
தொப்பி ஓரமாகும்
இன்ஸ்டண்ட் பத்வாக்கள்
இண்டனெட்டில் சேர்ச் ஆகும்.
சுற்றுலா சென்றாலும்
சற்றும் பிறழாமல்
பற்றுடன் இருப்போர்கள்
பாராட்டுக்குரியவர்கள்.
(Mohamed Nizous)