சம்பூரில் மீள்குடியேறிய மக்கள் காணிகளை அடையாளம் காண்பதில் சர்ச்சை: கைகலப்பில் நான்கு பெண்கள் காயம்.

0
145

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் 10 வருடங்களுக்குப் பின்னர் காடுமண்டிக் கிடந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்கள் காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ஏற்கனவே அந்த பகுதியில் கடற்படை முகாம் அமைந்திருந்த காரணத்தினால் சகல காணிகளும் ஒரு தொகுதியாக காணப்படும் நிலையில் தனித் தனியாக காணிகளின் எல்லையை அடையானம் காண்பதில் காணி உரிமையாளர்களிடையே அவ்வப்போது முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.

இந்த முரண்பாடுகள் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதலுக்குள்ளான இரு பெண்கள் உட்பட நான்கு பேர் இதுவரையில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். மார்ச் மாதம் 25ம் திகதி சம்பூர் பிரதேச மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு தமது பழைய இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

மீளக்குடியேறியுள்ள குடும்பங்கள் தங்கள் காணிகளையும் குடியிருப்பு நிலங்களையும் அடையாளம் கண்டுள்ள போதிலும் எல்லைகளை அடையாளம் காண்பதில் அவர்களிடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதாக பிரதேச சமூக ஆர்வலரான ஆர். ரவிந்திரன் தெரிவிக்கின்றார்.

காணி எல்லை தொடர்பாக மக்களிடையே சச்சரவுகள் இருந்தாலும் கணிசமான பிரச்சினைகளுக்கு உள்ளுர் தலைவர்களினால் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகின்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY