வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சீருடைகூட இல்லாமல் தான் இந்தியா வந்தோம்: டேரன் சமி

0
317

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

தனது அணியின் வெற்றி குறித்து டேரன் சமி கூறியதாவது:

எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்கோ கூட செய்யப்படவில்லை.

நாங்கள் இப்போது அணிந்துள்ள அணிக்கான சீருடை வாங்கி தருவதற்காக அவர் கடும் சிரமங்களை எதிர்கொண்டார். அவருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

20 ஓவர் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்ல வேண்டும் என்று கிரனெடா பிரதமர் கெயித் மிட்சேல் காலையில், வாழ்த்து மெசேஜ் அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்து செய்தி எங்களுக்கு உத்வேகம் தந்தது. அவருக்கு நன்றி. ஆனால் எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் எங்களிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இது எங்களை வருந்த செய்வதாக உள்ளது” என்று சமி விளாசி தள்ளிவிட்டார்.

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து கூறியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் வைக்ளிப் தாவே கேமரூன், சமியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், விரைவிலேயே சமியின் பேச்சு பற்றி விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாகவும், வெஸ்ட் இண்டீஸ் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY