ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடந்தது என்ன?

0
162

(ஹாதி)

தன்னுடைய மகனின் கல்வி நிலை தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளது என கூறி தாயொருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிர போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்.

அனோமா எனும் தாயே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். குறித்த தாய் தனது மகன் யசோதரவின் உடலில் காணப்படும் சிறிய குறைபாட்டால் கடந்த இரண்டு வருடமாக படிப்பை இழந்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், சிறுவனுக்கு குறும் பார்வை குறைவு மற்றும் காது சற்று குறைவாக கேட்கா தன்மையும் காணப்படுவதால், இவனுக்கு ஏற்றாற்போல் எமது பாடசாலைகளில் கல்வி கற்பிக்க முடியாது என பாடசாலை தலைமைகள் தெரிவிக்கின்றன இதனால் தன் மகனுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளதாக அனோமா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாய் கடந்த 28ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான லகிருவின் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்படுத்தி தனது பிரச்சினையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, இன்றும் இவருக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY