திடீர் மழை வெள்ளத்தில் 60 பேர் பலி

0
138

வடமேற்கு பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

காஷ்மீர் மற்றும் கில்கித் பல்டிஸ்தான் உள்ளிட்ட பிராந்தியங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பருவமழை இன்னும் துவங்காதபோதிலும், அதற்கு முன்னர் பெய்யும் மழையினால், உட்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றமடையாத பாகிஸ்தானின் பின்தங்கிய பிரதேசங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவது வழமை.

கிராமங்களில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் பருவமழை ஏற்படுத்திய சேதங்களில் 170க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY