கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் கலாசார அதிகார சபை அங்குரார்ப்பணம்

0
135
கலாசார அமைச்சின் வேண்டுகோளுக்கினங்க ஒவ்வொறு பிரதேச செயலகங்களிலும் கலாசார அதிகார சபை ஒன்றினை உருவாக்குதல் என்ற அடிப்படையில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் 2016.04.04ஆந்திகதி திங்கட்கிழமை (இன்று) மு.ப. 10.00 மணிக்கு பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் அவர்களின் தலைமையில் கலாசார அதிகார சபை உருவாக்குவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசார அதிகார சபையின் நோக்கங்களாக… அனைத்து பிரதேச கலைஞர்களுக்கும் தேசிய, சர்வதேசிய வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல். கலாசார நிகழ்வுகளுக்கு பொறுப்புவாய்ந்த சபையாக கலாசார அதிகார சபையை நடைமுறைப்படுத்தல். கலைஞர்களுக்கான கொடுப்பனவுகள், அடையாள அட்டை, ஓய்வூதியம், கலாபூசண விருது போன்றவற்றையும் பெற்றுக்கொள்ள கலாசார அதிகார சபையில் அங்கம் வகிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
கலாசார விழுமியங்கள் நிரம்பிய தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துப் பிரதேச கலைஞர்கள், மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோரின் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொள்ளல். அமைதியான, ஒழுக்கமான, முழுமையான சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை ஒன்று சேர்த்து கட்டியெழுப்புதல் போன்ற நோக்கத்தின் அடிப்படையிலே ஒவ்வொறு பிரதேச செயலகங்களிலும் கலாசார அதிகார சபை உருவாக்கப்படுகின்றது.
இதன்பிற்பாடு நிருவாக சபைத்தெரிவும் இடம்பெற்றது நிருவாக சபை விபரம்…
 
தலைவர் – எம்.எம். நௌபல் – (பிரதேச செயலாளர்)
உபதலைவர் – ஏ.எம்.ஏ. காதர்
செயலாளர் – எம்.பீ.டீ. கான்
உபசெயலாளர் – டப்லியு.டீ. அரூஸியா
பொருளாளர் – ஏ.பீ.எம். முஸ்தபா
இணைப்பாளர் – ஐ. றபீக்கா (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்)
ஆலோசனை சபை – எஸ்.எல்.எம். ஹனீபா, வீ.ஏ. ஜூனைட், எச்.எம்.எம். ஹனீபா, எ.எல்.எம். இஸ்மாயில்
உறுப்பினர்கள் – இவ்வதிகார சபையில் அங்கம் வகிக்கும் அனைவரும் உறுப்பினர்களாக கருதப்படுவர்
 
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், உதவி திட்டமிடல் பணிப்பாளர். எச்.எம்.எம். ருவைத், கணக்காளர் கே. சுஹீஸ்வரன், கலாசார உத்தியோகத்தர் எச்.எம்.எம். நியாஸ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. றபீக்கா, எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY