சங்கக்காராவின் சாதனையை சமன் செய்த சாமுவேல்ஸ்

0
142

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

டேரன் சமியின் அதிர்ஷ்டம்:

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சேமி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்த தொடரில் விளையாடிய 6 ஆட்டங்களிலும் டேரன் சேமியே நாணய சுழற்சியில் ஜெயித்திருக்கிறார். அத்துடன் அவர் முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் டி20 அணியின் தலைவராக அவர் தொடர்ந்து 10 ஆட்டங்களில் நாணய சுழற்சியில் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சங்கக்காராவின் சாதனை சமன்:

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடைசி வரை போராடி அரைசதம் (85 ஓட்டங்கள்) விளாசிய மர்லன் சாமுவேல்ஸ், 2012ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் அரைசதம் (78 ஓட்டங்கள்) அடித்திருந்தார்.

இதன் மூலம் உலகக்கிண்ண இறுதிச்சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றார்

முன்னதாக இலங்கையின் சங்கக்காரா 2009, 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டங்களில் அரைசதம் எடுத்திருக்கிறார்.

மேலும், இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் எடுத்த 85 ஓட்டங்களே, டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமாகும். முந்தைய சாதனையும் அவரது வசமே (78 ஓட்டங்கள்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY