வெலே சுதா உட்பட 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
132

பணமோசடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலே சுதா உட்பட 8 பேரை எதிர்வரும் 18 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளதால், 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விளக்கமறியலை நீடித்துக் கொள்ளுமாறும் நீதவான் சிறையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பான மற்றுமொரு வழக்கில் வெலே சுதாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY